கற்பழித்தவர்களை போட்டுத் தள்ளிய போலீஸ்! எப்படின்னுத் தெரியுமா?

06 December 2019 அரசியல்
police1.jpg

தெலுங்கானாவில் கால்நடை மருத்துவரைக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த நான்கு பேரையும், போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றனர்.

தெலுங்கானாவில் கடந்த நவம்பர் 27ம் தேதி அன்று, சாம்சாபாத் நகரில் உள்ள பாலத்தின் அடியில், 26 வயதுடைய கால்நடை மருத்துவரை நான்கு பேர் கொண்ட கும்பல், பாலியல் பலாத்காரம் செய்து கொன்றது. இதனையடுத்து, அடுத்த 36 மணி நேரத்திற்குள் குற்றவாளிகள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நவம்பர் 29ம் தேதி முகம்மது அலி என்ற முகம்மது ஆரிப், ஜோலூ சிவா, ஜோலூ நவீன் குமார் மற்றும் சின்தகுண்டா சென்னா கேசவலூ உள்ளிட்ட நான்கு பேரையும் கைது செய்த போலீசார், நவம்பர் 30ம் தேதி அன்று சாத்நகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் விதித்த்து நீதிமன்றம். புதன் கிழமை அன்று, போலீஸ் விசாரணைக்கு 7 நாட்கள் அளிப்பதாக கூறியதைத் தொடர்ந்து, நான்கு பேரையும் போலீசார் தங்களுடையக் கஸ்டெடியில் எடுத்து விசாரிக்க ஆரம்பித்தனர்.

பின்னர், பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட பாலத்தின் அடியில், அவர்களைக் கொண்டு சென்று விசாரித்தனர். எவ்வாறு நீங்கள் இந்தக் குற்றச் சம்பவத்தினை செய்தீர்கள் என விசாரிக்கும் பொழுது, அந்த நான்கு பேரும் தப்பிக்க முயற்சி செய்துள்ளனர். இதனையடுத்து, அந்த நான்கு பேரையும் போலீசார் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில், அந்த நான்கு பேரும் எங்கே பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தார்களோ, அங்கேயே மரணம் அடைந்தனர். நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என, இது குறித்து சமூக வலைதளங்களில் பலரும் தங்களுடையக் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

HOT NEWS