இந்தியாவில் 40 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று! தீவிர சிகிச்சை!

09 March 2020 அரசியல்
covid19latest.jpg

இந்தியாவில் தற்பொழுது கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, 40 ஆக உயர்ந்துள்ளது.

ஓமனின் மஸ்கட் நகரில் இருந்து, தமிழகத்தின் காஞ்சிபுரத்திற்குத் திரும்பிய, இந்திய சிவில் இன்ஜினியருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. 45 வயதுடைய அவருக்கு, இந்தத் தொற்று இருப்பதனை விமான நிலையச் சோதனையில், அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதனைத் தொடர்ந்து, அவர் தற்பொழுது, தனி சிகிச்சைப் பிரிவில், சென்னையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல்நிலையினை, மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர்.

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் இருந்து, இந்தியாவின் சென்னைக்குத் திரும்பிய 15 வயது சிறுவனக்கு, இந்த நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது! இதனால், அந்த சிறுவனும் தனிமைப்படுத்தப்பட்டு, சென்னை ராஜாஜி மருத்துவமனையில், சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்பட்டு உள்ளார். கேரளாவில் தான், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது, அதிகமாக உள்ளது. தற்பொழுது கூடுதலாக ஐந்து பேர், இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

சரியான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதனால், இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப் படுத்தப்பட்டு, சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பிரதமர் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், இந்த நோய் குறித்து தங்களுடையக் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளனர். இன்று நடைபெறும் ஹோலிப் பண்டிகை உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், பிரதமர் மோடி கலந்து கொள்ளவில்லை.

HOT NEWS