திருப்பதி கோயிலுக்கு 400 கோடி தட்டுப்பாடு!

11 May 2020 அரசியல்
thirumalai1.jpg

உலகின் மிகவும் பணக்கார கோயிலான திருப்பதி கோயிலில், கொரோனா வைரஸ் காரணமாக தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் நலன் கருதி, இந்தியா முழுவதும் வருகின்ற மே-17ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. கோயில்கள் மற்றும் புனித ஸ்தலங்களும் மூடப்பட்டு உள்ளன. வைணவ திவ்ய தேசங்களுள் முக்கியமானதாகக் கருத்தப்படும் திருப்பதி கோயிலும் மூடப்பட்டது.

அந்தக் கோயிலில் வேலை செய்கின்ற ஊழியர்களின் சம்பளமானது, தற்பொழுது 50% ஆக குறைக்கப்பட்டு உள்ளது. கோயில் பரமாரிப்பு உள்ளிட்ட வேலைகளுக்காக, தற்பொழுது ஒரு சிலர் மட்டுமே அங்கு பணிக்கு அனுமதிக்கப்படுகின்றனர். மற்றவர்கள் யாரையும், உள்ளே அனுமதிப்பதில்லை. தொடர்ந்து, கோயிலுக்குள்ளே பெருமாளுக்கு வேண்டிய பூஜைகள் அனைத்தும் செய்யப்பட்டு வருகின்றது.

இந்த சூழ்நிலையில், இந்த லாக்டவுன் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக, அக்கோயிலின் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையானுக்காக வங்கிகளில் மட்டும், 16,000 கோடிக்கும் அதிகமான ரூபாய் உள்ளது. மேலும், எட்டு டன் தங்கமும் உள்ளது. இவைகளைப் பயன்படுத்தாமல், எவ்வாறு செலவுகளை சமாளிப்பது என, கோயில் நிர்வாகம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

HOT NEWS