425 பேர் பலி! தொடரும் மரணம்! அதிகரிக்கும் நோயாளிகள்!

04 February 2020 அரசியல்
coronavirus.jpg

சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக, தற்பொழுது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 425 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கையானது, 21,000 ஆக உயிரிழந்துள்ளது.

உலகம் முழுக்க இந்த வைரஸ் காரணமாக, சுகாதாரம் மட்டுமின்றி பொருளாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இந்த வைரஸ் பாதிப்பால், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்ற நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் சீன அரசாங்கமும் விழிபிதுங்கி நிற்கின்றது. தற்காலிக மருத்துவமனைகளை அமைத்துள்ள சீன அரசாங்கம், அதனை விரைவில் திறக்க உள்ளது. ஆனால், நிலைமை மிகவும் மோசமாகி வருகின்றது.

இந்த நிலை நீடித்தால், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையானது, பல ஆயிரங்களைத் தாண்டும் என அஞ்சப்படுகின்றது. இந்த வைரஸ் காரணமாக, சீனாவின் சாலைகளில் மக்கள் நடமாட்டம் குறைந்துள்ளது. மேலும், பெரிய அளவில் வியாபாரமும் நடப்பது இல்லை. இதனால், சீனாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அது மட்டுமின்றி, அந்நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி ஆகிய இரண்டுமே, முற்றிலும் முடங்கியுள்ளது.

சீனாவின் மருத்துவர்கள், மிகவும் கடுமையாக உழைத்து வந்தாலும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவர்களுக்குப் பற்றாக்குறை ஏற்படும் அபாயமும் உள்ளது. இவ்வளவு நோயாளிக்கு முதலுதவி செய்ய இயலாமல், தற்பொழுது விளம்பரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மூலம், இந்த நோய் பற்றி மருத்துவர்கள் விளக்கமளித்து வருகின்றனர்.

HOT NEWS