43,000 விவசாயிகள், ஊழியர்கள் இந்தியாவில் தற்கொலை! பகீர் தகவல் வெளியானது!

04 September 2020 அரசியல்
farmersfield.jpg

இந்தியாவில் கடந்த ஒரே ஆண்டில் மட்டும் 43,000 விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, தேசிய குற்றவியல் ஆவணப்பதிவு தெரிவித்து உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், தேசிய அளவில் நடைபெறுகின்ற குற்றங்களின் புள்ளி விவரங்கள் குறித்து, தேசிய குற்றவியல் ஆவணப்பதிவு துறையானது, தகவல் வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில், 2019ம் ஆண்டிற்கான புள்ளி விவரத்தினைத் தற்பொழுது வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியா முழுவதும் சுமார் 43,000 விவசாயம் மற்றும் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டு உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இதில் 32,563 தினக் கூலித் தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சித் தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. இது கடந்த 2018ம் ஆண்டினை விட, மிகவும் அதிகம். 2018ம் ஆண்டில் 30,132 ஆக இந்த எண்ணிக்கை இருந்தது. அதே போல், விவசாயத் துறையில் 5,957 விவசாயிகளும், 4,324 விவசாயத் தொழிலாளர்களும் தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இதில், 575 பெண் விவசாயிகள் என்பது உறுதியாகி உள்ளது.

HOT NEWS