புனித நீரால் பரவிய கொரோனா வைரஸ்! சர்ச்சால் ஏற்பட்ட சர்ச்சை!

18 March 2020 அரசியல்
covidchurch.jpg

சர்ச்சில் வழங்கப்பட்ட புனித நீரின் மூலம், கொரோனா வைரஸ் பரவி உள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே உலகம் முழுக்க ஒன்றே முக்கால் லட்சம் பேர், இந்த கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தென்கொரியாவில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. தென் கொரியாவில், உள்ள சர்ச்சில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்கவும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருக்கவும் கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்று உள்ளது.

மொத்தம் 160 பேர் உறுப்பினராக உள்ள அந்த தேவாலயத்தில், 90 பேர் அந்த கூட்டுப் பிரார்த்தனையில் கலந்து கொண்டனர். அதில், ஒரு பாட்டிலில் இருந்து புனித நீரானது, வந்திருந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. உப்புநீரானது (புனிதநீர்) வந்திருந்தவர்களின், வாய்க்குள் கொஞ்சமாக ஊற்றப்பட்டது.

அவ்வளவு தான். அவர்கள் ஊற்றியது புனித நீரல்ல, இறந்த பின் ஊற்றப்படும் பால். ஆம், அந்த புனித நீரினை அருந்தியவர்களில், 46 பேருக்கு கொரோனா தொற்றுப் பரவிவிட்டது. இதனால், அந்த தேவாலயத்தின் உறுப்பினர்கள் கடும் விரக்தியில் உள்ளனர். இது தற்பொழுது, தென் கொரியாவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. எப்படி, அந்த நீரின் மூலம் இந்த வைரஸ் பரவியது என்று, சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

HOT NEWS