சீனாவில் மீண்டும் பரவ ஆரம்பித்தது கொரோனா வைரஸ்! உண்மையை மறைக்கும் சீனா!

12 April 2020 அரசியல்
coronaquarantine.jpg

கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், தற்பொழுது மீண்டும் புதிய விதத்தில் கொரோனா வைரஸானது, சீனாவில் பரவ ஆரம்பித்து உள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஊஹான் பகுதியில் இருந்து, கடந்த டிசம்பர் அன்று பரவ ஆரம்பித்தது இந்த கொரோனா வைரஸ். இது மளமளவென்று, காட்டுத் தீ போல அனைத்து இடங்களுக்கும் பரவியது. சீனாவில், 81,000 பேர் பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், 3,339 பேர் மரணமடைந்து உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. தற்பொழுது வெறும், 1089 பேர் மட்டுமே, மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வைரஸானது, தற்பொழுது உலகம் முழுவதும் பரவி உள்ளது. இதன் காரணமாக, அமெரிக்காவில் நியூயார்க் மற்றும் நியூஜெர்சி உள்ளிட்ட மாகாணங்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளன. அந்நாட்டில், இருபதாயிரம் பேர், இந்த வைரஸால் மரணமடைந்து வருகின்றனர். இதற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியிலும் பல நாடுகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சீனாவில் இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது என நினைத்த நினையில், தற்பொழுது பீஜிங் பகுதியில் 46 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு, இந்த கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. அவர்களில் 40 பேருக்கு, எவ்வித அறிகுறியும் இல்லை.

இதனால், மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் குழம்பியுள்ளனர். எது எப்படி மீண்டும் பரவ ஆரம்பித்தது, அறிகுறிகள் தென்படாததன் காரணம் என்ன என்பது உள்ளிட்டப் பல சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளன. இது குறித்து பேசுவோர், இது போன்று பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும், சீனா இது பற்றிய உண்மையை மறைக்கின்றது எனவும் பேசி வருகின்றனர்.

HOT NEWS