இந்தியாவில் ஒற்றுமையும், அமைதியும் தொடர வேண்டும் என, இந்திய சினிமா மற்றும் பிறத் துறைகளைச் சேர்ந்த, 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு, கையொப்பத்துடன் கடிதம் எழுதினர்.
அவர்கள் மீது, பீகாரில் உள்ள நீதிமன்றத்தில் சுதீர்குமார் ஓஜா என்பவர் வழக்குத் தொடர்ந்தார். நாட்டின் தோற்றத்தை அவமானப்படுத்துவதாகவும், பிரதமர் மோடியின் பணியையும், செயலையும் குறைத்து மதிப்பிடுவது போன்று இருக்கின்றது. ஆதலால், அவர்கள் மீது வழக்கு தொடர்ந்தார்.
இதனைத் தொடர்ந்து, அந்த 49 பிரபலங்கள் மீது, தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எதிர் கட்சிகள், சினிமா பிரபலங்கள், எழுத்தாளர்கள் எனப் பலரும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து, பீகார் காவல்துறையினர், வழக்கினை ரத்து செய்ய உள்ளனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், இந்த வழக்கில் போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால், இந்த வழக்கினை ரத்து செய்ய உள்ளோம் எனக் கூறியுள்ளனர்.