ஜெய் ஸ்ரீராம் சொல்ல சொல்லி வற்புறுத்த வேண்டாம்! 49 பிரபலங்கள் மோடிக்கு கடிதம்!

24 July 2019 அரசியல்
aparnasen.jpg

pic courtesy: ANI

இந்தியாவின் 50 பிரபலங்கள் தற்பொழுது மோடிக்கு ஒரு கடிதத்தை எழுதி, அனுப்பி உள்ளனர். அதில், அன்பையும், அமைதியையும் விரும்பும் இந்தியர்கள் நாங்கள். ஆனால், தற்பொழுது நடக்கும் ஒரு சில அசம்பாவித விஷயங்கள், எங்களை வருத்தப்பட வைத்துள்ளது.

நம்முடைய இந்திய அரசானது, மதம், இனம், மொழி மற்றும் கலாச்சாரம் என்ற அனைத்திலும், அனைவருக்கும் சம உரிமை வழங்குகிறது. இஸ்லாமியர்கள் மற்றும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். என்சிஆர்பி எனப்படும் அமைப்பின் மூலம் நாங்கள் அறிந்த வரையில், 2016ம் ஆண்டு, 840க்கும் அதிகமான தலித்கள் தாக்கப்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளது.

ஜனவரி ஒன்று 2009 முதல் அக்டோபர் 29, 2018 வரை 254 மத வெறித் தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் 91 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 579 பேர் படுகாயமடைந்துள்ளனர். அதில் 60%க்கும் அதிகமாக தாக்கப்பட்டவர்கள் இஸ்லாமியர்கள்.

நாங்கள் ஆன்டி இந்தியனோ அல்லது தேசத்திற்கு எதிரானவர்களோ அல்லது அரசாங்கத்திற்கு எதிரானவர்களோ அல்ல. நாங்கள் நம் நாட்டின் நன்மைக்காகவே இதனைக் கூறுகிறோம். தயவு செய்து இதனை கருத்தில் கொள்ளுங்கள் என, கடிதம் எழுதியுள்ளனர்.

இது குறித்து இதில் இணைந்துள்ள அபர்னா சென் கூறுகையில், இது கட்சிப் பற்றியது அல்ல. இது அரசியல் பற்றியது அல்ல. இது நம் பாரதப் பிரதமருக்கான வேண்டுகோள் ஆகும். வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுபவர்கள் ஏன் ஜெய் ஸ்ரீ ராம் கூற வேண்டும்? அவர்கள் ஏன் வற்புறுத்தப் பட வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்த பிரபலங்களின் பட்டியிலில், தமிழகத்தின் பெரிய இயக்குநர் திரு மணிரத்னம், பாலிவுட் பிரபலங்களான அனுராக் காஷ்யப், அஜ்ஜன் தத், கொன்கொனா ஷென்ஷர்மா உட்பட 49 பிரபலங்கள் தங்களுடைய கையெழுத்துடன் கூடிய கடிதத்தை, பாரதப் பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

HOT NEWS