குரூப் 4 தேர்வு முறைகேடு! குற்றவாளிகளுக்கு ஐந்து நாள் போலீஸ் காவல் விசாரணை!

03 March 2020 அரசியல்
tnpscjeyakumar.jpg

குரூப் 4 தேர்வில் முறைகேட்டில் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்பட்ட, ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்த் என்ற இருவருக்கும், ஐந்து நாட்கள் போலீஸ் காவல் விதித்து சென்னையில் உள்ள, சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில், டின்பிஎஸ்சி தேர்வில் முறைகேடு நடைபெற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் ஈடுபட்டதாக, தேர்வு எழுதிய நாற்பது பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், குரூப் 2 தேர்விலும் முறைகேடு நடைபெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காகவும், பலர் கைது செய்யப்பட்டனர். மறைகின்ற பிரத்யேக மையினைப் பயன்படுத்தி, தேர்வில் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த மையினையும், இதற்குக் காரணமாக இருந்தவர்களையும் சிபிசிஐடி போலீசார் கைது செய்து வந்தனர். இதில் முக்கியக் குற்றவாளியாக இருந்த ஜெயக்குமாரைப் போலீசார் தேடி வந்த நிலையில், அவரே சென்னை கமிஷனர் அலுவலகத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதனால், ஏழு நாட்கள் விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.

பின்னர், குரூப்-2 தேர்வு குறித்து விசாரிக்க ஐந்து நாட்கள் அவகாசம் கேட்டது காவல்துறை. அதற்கும் அனுமதி அளித்து இருந்தது நீதிமன்றம். இந்நிலையில், தற்பொழுது விஏஓ தேர்வில் நடைபெற்ற முறைகேடு குறித்து விசாரிக்க ஏழு நாட்கள் அவகாசம் கேட்டது. ஆனால், ஐந்து நாட்கள் அவகாசம் அளித்துள்ளது நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து, இதில் ஈடுபட்டதாக கருததப்படும், ஜெயக்குமார் மற்றும் ஓம்காந்த் என்பவர்கள் போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

HOT NEWS