சுஜித்தினை மீட்க 5 லட்சம் செலவானது!

31 October 2019 அரசியல்
savesurjithfamily.jpg

கடந்த 25ம் தேதி அன்று, திருச்சியின் மணப்பாறைப் பகுதியில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித் உயிரிழந்தான். அவனுடைய உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இதனிடையே, அவனை மீட்கும் பணிக்காக சுமார் 11 கோடி ரூபாய் செலவானது என வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பரவி வந்தன. இதற்கு நேற்று மறுப்புத் தெரிவித்து வருவாய் துறை ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்திருந்தார். மேலும் அவர் பேசுகையில், பேரிடர் மீட்புப் பணிகளுக்கு பணம் ஒரு பொருட்டே இல்லை எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், சுர்ஜித்தை மீட்க வெறும் 5 லட்சம் மட்டுமே செலவானது என, திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், உதவியில் ஈடுபட்ட பல நிறுவனங்கள், மனிதாபிமான அடிப்படையில் உதவியதாகவும், அவர்கள் செலவிற்கானத் தொகையை கேட்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மீட்புப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட இயந்திரங்களுக்காக ஐந்தாயிரம் லிட்டர் டீசல் மட்டுமே வழங்கப்பட்டது எனவும், மேலும், 5 லட்ச ரூபாயானது செலவானது எனவும் அவருடைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பொய்யான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம் எனவும், அவருடைய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த மீட்புப் பணியில் உதவிகரமாக இருந்த எல்&டி, கேஎன்ஆர் கன்ஸ்ட்ரக்ஸன்ஸ், என்ஹெச்ஏஐ நிறுவனங்களுக்கு நன்றிகளையும் கூறியுள்ளார்.

HOT NEWS