ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி சென்ற, திமுக எம்பி கனிமொழி மீது தற்பொழுது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
உத்திரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் 19 வயது பெண் கற்பழிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம், இந்திய அளவில் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு இதுவரை ஆளும் பாஜக அரசு எவ்வித பதிலும் தெரிவிக்காமல், மவுனம் காத்து வருகின்றது. இந்நிலையில், காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்டப் பலக் கட்சிகள் இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகத்தில் திமுக சார்பில் நேற்று பேரணி மற்றும் போராட்டம் முதலியவை நடைபெற்றது. திமுக மகளிரணி சார்பில், கனிமொழி தலைமையில் ஆளுநர் மாளிகையினை நோக்கி பேரணி நடைபெற்றது. அனுமதி வாங்காமல் இந்த பேரணியானது நடத்தப்பட்டது. இதில், கனிமொழி உள்ளிட்டப் பலரும், கையில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆளுநர் மாளிகை நோக்கி நடைபயணம் சென்றனர். ஆளுநர் மாளிகை அருகே, அவர்களை மடக்கியப் போலீசார் அவர்களை கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் சிறிது நேரம் கழித்து விடுவித்தனர்.
இருப்பினும், அனுமதி இன்றி, ஊரடங்கு சமயத்தில் ஆள் சேர்த்தது, பேரணி வந்தது என மொத்தம் ஐந்து வழக்குகள் கனிமொழி மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.