3250 படுக்கைகள்! மும்பையில் 5 கொரோனா மருத்துவமனைகள் திறப்பு!

09 July 2020 அரசியல்
uddhavthackeray1.jpg

மும்பையில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே இருப்பதால், தற்பொழுது தற்காலிகமாக 5 பெரிய மருத்துவமனைகளை அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே திறந்து வைத்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில் மஹாராஷ்டிரா மாநிலமே, முதல் இடத்தில் உள்ளது. இந்தப் பாதிப்பின் காரணமாக, மும்பை மாவட்டம், முழுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு கொரோனா நோயாளிகளால், அம்மாவட்ட மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.

இதனையடுத்து, கொரோனா நோயாளிகளுக்காக புதிய தற்காலிக மருத்துவமனைகளை அமைக்கும் பொருட்டு, மும்பையின் முல்லுண்ட், தஹிசர் கிழக்கு, பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ், தாஹிசர் மேற்கு, மஹாலட்சுமி ரேஸ்கோர்ஸ் உள்ளிட்டப் பகுதிகள் தேர்வு செய்யப்பட்டன. அங்கு மாநில அரசின் பலக் கிளை அமைப்புகளின் உதவியுடன் புதிதாக ஐந்து தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மருத்துவமனைகளில் மொத்தமாக 3,520 படுக்கைகள் உள்ளன. இந்த மருத்துவமனையினை, மஹாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்ரே காணொலி வாயிலாகத் திறந்து வைத்தார்.

HOT NEWS