சாத்தான்குளம் வழக்கு! 5 காவலர்கள் அதிரடி கைது! சிபிசிஐடி நடவடிக்கை!

02 July 2020 அரசியல்
sathankulampolice.jpg

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக, ஐந்து காவலர்களை சிபிசிஐடி போலீசார் தற்பொழுது கைது செய்துள்ளனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிங்ஸ் ஆகியோர் கடந்த மாதம் காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்டதாக, சிபிசிஐடி போலீசார், அந்த வழக்கினைத் திருத்தம் செய்தனர். மேலும், நேற்று முதல் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட காவலர்களைத் தேடும் பணியும் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த வழக்கிற்காக ஐஜி சங்கரின் தலைமையில் 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிப்பு, விவரங்களை சேகரித்தல் மற்றும் சம்பந்தப்பட்டவர்களை கண்காணித்தல் உள்ளிட்டவைகளை செய்து வந்தனர்.

சாத்தான்குளம் காவல்நிலையத்தில் வைத்து, இருவரையும் போலீசார் தாக்கியதற்கான ஆதாரங்கள் கிடைத்ததை அடுத்து, மர்மமாக இவர்கள் இறந்த வழக்கினை, கொலை வழக்காக சிபிசிஐடி போலீசார் மாற்றி அமைத்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் உதவி ஆய்வாளர்கள் ரகுகணேஷ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அதில், ரகுகணேஷ் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மேலும், காவலர்கள் முருகன் மற்றும் முத்துராஜ் ஆகியோரினையும் போலீசார் இன்று அதிகாலையில் கைது செய்தனர்.

அதே போல், சாத்தான்குளம் காவல்நிலையத்தின் ஆய்வாளர் ஸ்ரீதரிடம் விசாரணை நடத்திய சிபிசிஐடி பிரிவு போலீசார், அவரையும் தற்பொழுது கைது செய்துள்ளனர். இதற்குப் பலரும் தங்களுடைய வரவேற்பினை தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS