மேற்கு வங்கத்தில் 5 ரயில்கள், 15 பேருந்துகள் எரிப்பு! பல கடைகள் சாம்பல்!

23 December 2019 அரசியல்
mamatabanerjee12.jpg

மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் மம்மதா பேனர்ஜி தலைமையில் போராட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற போராட்டத்தில், கொல்கத்தாவில் நடைபயணம், ஆர்ப்பாட்டம் உள்ளிட்டவைகளில் மம்மதா பேனர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் ஈடுபட்டனர். இந்நிலையில், பல இடங்களில் வன்முறை சம்பவங்கள், கலவரங்கள் மற்றும் தீ மூட்டுதல் உள்ளிட்டவைகள் நடைபெற்றுள்ளன.

முர்ஷிதபாத் நகரில் உள்ள ரயில் நிலையத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கு நின்றிருந்த இரயில்களை தீயிட்டு கொளுத்தினர். அது மட்டுமின்றி, சுற்றியிருந்த கடைகளையும் அடித்து நொறுக்கினர்.

ஹௌராவில் உள்ள சங்க் ரயில் நிலையமும் தீக்கிரையானது. மேலும், போராட்டக்காரர்கள் தொடர்ந்து பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டனர். இதனால், பல இரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால், போராட்டக்காரர்கள் அமைதி காக்கும்படி, மம்மதா பேனர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HOT NEWS