5 டிரில்லியன் அடைந்து விடுவோம் என கனவு காணாதீர்கள்! மன்மோகன் சிங் கோபம்!

18 October 2019 அரசியல்
manmohansingh12.jpg

வரும் 2024ம் ஆண்டுக்குள், நம் இந்தியப் பொருளாதாரம் 5 டிரில்லியனை எட்டிவிடும் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் பொழுது கூறியிருந்தார். அது குறித்து, நேற்றுப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய மன்மோகன் சிங், வரும் 2024ம் ஆண்டுக்குள் 5 டிரில்லியன் பொருளாதாரத்தை அடைந்துவிடுவோம் என, கனவு காண வேண்டாம் என கூறினார்.

இது குறித்து அவர் பேசுகையில், நம்முடையப் பொருளாதாரம் இந்நேரம், எட்டு முதல் பத்து சதவிகித வளர்ச்சியினை அடைந்திருக்க வேண்டும். ஆனால், தற்பொழுது 5.5 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகித வளர்ச்சியினையே எட்டியுள்ளது. இது இளைஞர்களின் வாழ்க்கையைப் பெரிதும் பாதிக்கும்.

சர்வதேச நீதிக் கூட்டமைப்பின் அறிக்கையின் படி, இந்த ஆண்டு நம் நாட்டின் வளர்ச்சி விகிதம் 6.1 இருந்து 7.3 சதவிகிதமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், தற்பொழுது 6% அடைவதற்கே கஷ்டமாகி உள்ளது என்று கூறியுள்ளார்.

இவருக்குப் பதிலளிக்கும் விதத்தில் பேசிய நிதி ஆயோக்கின் துணைத் தலைவர் திரு. ராஜீவ் குமார் பேசுகையில், கண்டிப்பாக நம் நாடு 2024ம் ஆண்டு நிச்சயமாக 5 டிரில்லியன் பொருளாதாரத்தினை எட்டிவிடும். மேலும் அடுத்த ஆண்டு 2020-2021க்குள் இந்தியாவின் வளர்ச்சியானது 8 முத்ல 8.5% மாறிவிடும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS