விரைவில் காஷ்மீரில் 50,000 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்! ஆளுநர் பேட்டி!

29 August 2019 அரசியல்
kashmirgovernor.jpg

காஷ்மீர் மாநிலத்தில் விரைவில் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என, அம்மாநில ஆளுநர் சத்ய பால் மாலிக் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் அளித்தப் பேட்டியில், இன்னும் சில மாதங்களில், ஜம்மூ-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதியில், சுமார் 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். ஆனால், இந்த வேலைவாய்ப்புகளில் இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும். ஒரு இடத்தைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஸ்மார்ட்போன்கள் அனுமதிக்கப்படும். அதன் மூலம் தகவல் தொடர்பு செய்ய இயலும். ஏற்கனவே லேண்ட்லைன் மூலம், தகவல் தொடர்பு மீண்டும் அனுமதிகப்பட்டுள்ளது.

மேலும், இந்த பகுதிகளில் எவ்வித அசம்பாவிதமும், உயிரிழப்பையும் அரசு அனுமதிக்காது. அதற்காக என்ன செய்ய வேண்டுமோ, அதனை அரசு செய்யும். புதிய வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் மருத்துவமனை ஆகியவற்றை ஜம்மூ-காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் ஆரம்பிக்க அனுமதி அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

HOT NEWS