டீக்கடைக்காரருக்கு 50 கோடி கடன்! வங்கியால் அதிர்ச்சி!

27 July 2020 அரசியல்
teashops.jpg

ஏற்கனவே வாங்கியுள்ள 50 கோடி ரூபாய் கடனை, எப்பொழுது அடைப்பீர்கள் என, டீக்கடைக்காரருக்கு வங்கி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்தியாவில் தற்பொழுது கொரோனா காரணமாக ஊரடங்கானது, ஜூலை 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த சூழ்நிலையில், ஹரியானாவில் டீக்கடை வைத்து நடத்திக் கொண்டு இருக்கும் ராஜ்குமார் என்பவர், தொழிலை நடத்தப் பணம் இல்லாததால் அங்குள்ள வங்கிக்குச் சென்று தொழில் நடத்தப் பணம் வேண்டும் எனவும், கடனாக தர வேண்டும் எனவும் விண்ணப்பித்து உள்ளார்.

ஆனால், அவருடைய விண்ணப்பத்தினை நிராகரித்த அதிகாரிகள், நீங்கள் ஏற்கனவே 50 கோடி கடன் வாங்கியிருக்கின்றீர்கள் எனவும், அதனை எப்பொழுது திருப்பிக் கட்டுவீர்கள் எனவும் கேள்விக் கேட்டு உள்ளனர். நீங்கள் ஏற்கனவே வாங்கியக் கடனைக் கட்டாததால், இந்த முறைக் கடன் வழங்க இயலாது என்றுக் கூறியுள்ளனர். இதனைக் கேட்ட ராஜ்குமார் அதிர்ச்சி அடைந்து உள்ளார்.

நானே டீக்கடை நடத்தி வருகின்றேன். நான் எப்படி 50 கோடி கடன் வாங்கியிருப்பேன் என்று விவாதம் செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தியதில், ராஜ்குமார் பெயரினைப் பயன்படுத்தி யாரோ வங்கியில் பண மோசடி செய்துள்ளதைக் கண்டுபிடித்து உள்ளனர். இது குறித்துத் தற்பொழுது விசாரணை நடத்தியும் வருகின்றனர்.

HOT NEWS