கருப்பர் கூட்டம் சேனலின் 500 வீடியோக்கள் அகற்றம்!

21 July 2020 சினிமா
karupparkootam.jpg

கருப்பர் கூட்டம் சேனலுக்குச் சொந்தமான, 500 வீடியோக்களை, சென்னை சைபர் க்ரைம் போலீசார் நீக்கியுள்ளனர்.

தமிழ் கடவுளான முருகப் பெருமானைப் போற்றிப் பாடப்படும் கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில், கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் வீடியோ ஒன்று வெளியானது. அது தற்பொழுது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக மக்கள் பலரும் தங்களுடைய எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாஜக சார்பில், காவல்துறையில் புகார் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தாமாக முன்வந்து கருப்பர்கூட்டம் சேனலை, அந்த வீடியோவினை நீக்கியது. இருப்பினும், அவர்கள் பேசியது குறித்து பலரும் எதிர்ப்பினைத் தெரிவித்து வந்ததால், அந்த சேனலுக்கான அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. அந்த சேனலின் உரிமையாளர் செந்தில்நாதன் கைது செய்யப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், அந்த சேனலில் வீடியோக்களை தொகுத்து வழங்கி வந்த சுரேந்தர் என்பவரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், தற்பொழுது அந்த சேனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட 500க்கும் மேற்பட்ட வீடியோக்களை, சென்னை சைபர் க்ரைம் போலீசார் நீக்கியுள்ளனர். இது குறித்த வழக்கானது, அடுத்த மாதம் விசாரணைக்கு வர உள்ளது.

HOT NEWS