உபியில் 5,200 தொழிற்சாலைகள் திறப்பு! யோகி அதிரடி நடவடிக்கை!

14 April 2020 அரசியல்
yogiadityanath3.jpg

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 5,200 தொழிற்சாலைகளைத் திறக்க, அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அனுமதி அளித்துள்ளார்.

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை எதிர்கொள்ளும் விதமாக, உத்திரப்பிரதேச அரசானது பல நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

அங்கு அம்மாநில அரசாங்கம், ஊரடங்கினை நீட்டிப்பதாக எவ்வித அறிவிப்பினையும் வெளியிடவில்லை. அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாமல் இருப்பதற்காக 905 மாவு ஆலைகள், 419 எண்ணெய் ஆலைகள், 235 பருப்பு ஆலைகள் உட்பட 5,200 தொழிற்சாலைகளை திறக்க அனுமதி அளித்துள்ளார்.

HOT NEWS