55 லட்சம் டோஸ் வெளிநாடுகளுக்கு இலவச உதவி! இந்தியாவிற்கு குவியும் பாராட்டு!

29 January 2021 அரசியல்
covaxin.jpg

இந்தியாவில் தற்பொழுது தயாரிக்கப்பட்டு உள்ள கொரோனா தடுப்பு மருந்துகளை, அண்டை நாடுகளுக்கு வழங்கி வந்த காரணத்தால், பாராட்டு குவிந்து வருகின்றது.

கடந்த வாரம் தொடங்கி, இந்தியாவின் பலப் பகுதிகளிலும் கொரோனா தடுப்பு மருந்தானது, பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. இந்த மருந்துகளை, தற்பொழுது வெளிநாடுகளுக்கும் இந்திய அரசு வழங்கி வருகின்றது. இந்த மருந்துகளை எங்களுக்கும் தர வேண்டும் என, பல நாடுகளும் கோரிக்கை வைத்தன. அதனை ஏற்று, மோடி தலைமையிலான அரசு 55 லட்சம் டோஸ் மருந்துகளை இலவசமாக வழங்கி உள்ளது.

இது குறித்து, பேசிய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவத்ஸவா, நேபாளம், வங்க தேசம், மியான்மர், இலங்கை, உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு சுமார் 55 லட்சம் டோஸ்களை முதல் வாரத்திலேயே அனுப்பியுள்ளோம். அடுத்து வருகின்ற நாட்களில் ஓமன், பசுபிக் தீவு உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த மருந்தானது வழங்கப்படும். சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, கனடா, மங்கோலியா உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்த மருந்தானது விற்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

HOT NEWS