565 பேர் பலி! குறையாத மரணங்கள்! மருந்து கண்டுபிடிக்கவில்லை சீனா அறிவிப்பு!

06 February 2020 அரசியல்
coronavirus18.jpg

இன்று காலை 9 மணி நிலவரப்படி, சீனாவில் கொரோனா வைரஸ் காரணமாக, சுமார் 565 பேர் மரணமடைந்து இருக்கலாம் என்றத் தகவல் வெளியாகி உள்ளது. நாளுக்கு நாள், மரணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. ஒரே நாளில், கூடுதலாக 8,000 பேர் இந்த கொரோனா வைரஸ் காரணமாக, பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தற்பொழுது வரை இந்த கொரோனா வைரஸ் காரணமாக, உலகம் முழுவதும் சுமார் 28,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் தொற்றினைக் கட்டுப்படுத்த, குறைந்தது அடுத்த மூன்று மாதங்களுக்கு 676 மில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸானது, சீனாவில் இருந்து மற்ற நாடுகளுக்குப் பரவாமல் இருக்க, சர்வதேச நாடுகள், தங்களுடைய நாட்டு விமானங்களை சீனாவிற்கு இயக்காமல் உள்ளன. ரஷ்யா உள்ளிட்ட நாடுகள், தங்களுடைய எல்லைப் பகுதியினை மூடியுள்ளன.

சீனாவில் தற்பொழுது வரை 31 பகுதிகளில், இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது. பாதிக்கப்பட்டவர்களில், 633 பேர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். ஹூபேய் நகரின் 50% மக்கள், இந்த கொரோனா வைரஸ் காரணமாக, பாதிக்கப்பட்டுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது. இதன் வீரியத்தினை உணர்ந்த, சர்வதேச சுகாதார மையம் இந்த கொரோனா வைரஸ் நோயினை, சர்வதேச சுகாதார அச்சுறுத்தலாக அறிவித்துள்ளது.

இதனை வரும் ஏப்ரல் மாதத்திற்குள் கட்டுப்படுத்தாவிட்டால், கண்டிப்பாக 676 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு செலவாகும் என, அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. தற்பொழுது வரை, இந்த கொரோனா வைரஸ் மூலம் ஏற்படும் நிமோனியா காய்ச்சலுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், உயிரிழப்புகள் அதிகரிக்கும் எனவும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS