59 சீன ஆப்களுக்குத் தடை! மத்திய அரசு அதிரடி!

30 June 2020 அரசியல்
tiktok.jpg

டிக்டாக் உள்ளிட்ட 59 சீன ஸ்மார்ட்போன் ஆப்களை, இந்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த மே 5ம் தேதி தொடங்கி, லடாக் எல்லையில் பிரச்சனை நிலவி வருகின்றது. இதன் உச்சமாக கடந்த ஜூன் 15ம் தேதி நள்ளிரவின் பொழுது, சீன இராணுவத்தினர் கொடூரமாக சண்டையிட்டதில், 20 இந்திய வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சூழ்நிலையில், சீனப் பொருட்களைத் தடை செய்வது தொடர்பாக, பல அரசியல்வாதிகளும், இந்தியப் பொதுமக்களும் போராட்டங்களும், கோரிக்கைகளும் விடுத்து வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், இந்திய சைபர் தொழில்நுட்பப் பிரிவு மற்றும் உள்துறை அமைச்சகம் அதிரடியான செயல் ஒன்றில் ஈடுபட்டு உள்ளது. இந்தியாவில் அதிகளவில் சீனாவின் ஆப்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. அவைகள், தற்பொழுது பயனர்களின் தகவல்களை சேமிக்கலாம் எனவும், பயனர்களின் தகவல்களை தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் தகவல்கள் பரவியது.

இதனைத் தொடர்ந்து, தற்பொழுது மத்திய தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கீழ்காணும் சீன ஆப்களுக்குத் தடை விதித்துள்ளது.

1. TikTok, 2. Shareit, 3. Kwai, 4. UC Browser, 5. Baidu map, 6. Shein, 7. Clash of Kings, 8. DU battery saver, 9. Helo, 10. Likee, 11. YouCam makeup, 12. Mi Community, 13. CM Browers, 14. Virus Cleaner, 15. APUS Browser, 16. ROMWE, 17. Club Factory, 18. Newsdog, 19. Beutry Plus, 20. WeChat, 21. UC News, 22. QQ Mail, 23. Weibo, 24. Xender, 25. QQ Music, 26. QQ Newsfeed, 27. Bigo Live, 28. SelfieCity, 29. Mail Master, 30. Parallel Space, 31. Mi Video Call — Xiaomi, 32. WeSync, 33. ES File Explorer, 34. Viva Video — QU Video Inc, 35. Meitu, 36. Vigo Video, 37. New Video Status, 38. DU Recorder, 39. Vault- Hide, 40. Cache Cleaner DU App studio, 41. DU Cleaner, 42. DU Browser, 43. Hago Play With New Friends, 44. Cam Scanner, 45. Clean Master - Cheetah Mobile, 46. Wonder Camera, 47. Photo Wonder, 48. QQ Player, 49. We Meet, 50. Sweet Selfie, 51. Baidu Translate, 52. Vmate, 53. QQ International, 54. QQ Security Center, 55. QQ Launcher, 56. U Video, 57. V fly Status Video, 58. Mobile Legends, 59. DU Privacy

HOT NEWS