5, 8 பொதுத் தேர்வு அந்தந்தப் பள்ளிகளிலேயே நடைபெறும்! பள்ளிக் கல்வித் துறை!

21 January 2020 அரசியல்
sengottaiyan1.jpg

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புப் பொதுத் தேர்வானது, மார்ச் மாதம் நடைபெற உள்ளது. இதற்கான அட்டவணையை, தமிழக பள்ளிக் கல்வித் துறை ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. இதற்கு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு நிலவி இருந்தது.

மேலும், பல அரசியல் கட்சிகளும் 5 மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு, பொதுத் தேர்வு வைக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அரசாங்கம் உடனடியாக, இந்தப் பொதுத் தேர்வு அறிவிப்பினை, திரும்பப் பெற வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில், தேர்வு மையங்கள் பற்றிய அறிவிப்பும் வெளியானது.

பொதுவாக பொதுத் தேர்வு என்றாலே, ஊரில் உள்ள ஒரு சிலக் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டுமே தேர்வுகள் நடைபெறும். அந்தப் பள்ளிகளுக்கு, மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். அங்கு தான் பொதுத் தேர்வு நடத்தப்படும். அதையே, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் அறிவித்து இருந்தனர்.

ஆனால், பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்ட கடும் எதிர்ப்பிற்கு இடையில், அந்த அறிவிப்பினை தமிழகப் பள்ளிக் கல்வித்துறை திரும்பப் பெற்றது. ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள், தங்கள் பள்ளிகளிலேயே பொதுத் தேர்வினை எழுதலாம் என்று கூறியுள்ளது.

HOT NEWS