தஞ்சை கோயிலில் 600 ஆண்டுகள் பழைமையான சிலைகள் நூதனமாக திருட்டு!

20 January 2020 அரசியல்
thanjavur.jpg

பாதுகாப்பு கேமிராவில் ஸ்பேர அடித்து, மிளகாய் பொடிகளைத் தூவிவிட்டு, கோயிலுக்குள் இருந்த பல சிலைகளை, மர்ம கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை ஜைன முதலி தெருவில், 600 வருடப் பழமையான சமணக் கோயில் உள்ளது. அந்தக் கோயிலுக்கு ஆதீஸ்வரர் என்றுப் பெயர். அந்தக் கோயிலில் வழக்கம் போல, காலையில் நடையை திறப்பதற்காக கோயில் குருக்கள் வந்துள்ளார். அப்பொழுது கோயிலுக்குள் இருக்க வேண்டிய சிலைக்களை காணவில்லை. இதனால், அதிர்ச்சி அடைந்த அவர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்துள்ளப் புகாரின் அடிப்படையில், போலீசார் கோயிலில் விசாரணை நடத்தினர்.

அதில், கோயிலில் உள்ள கண்காணிப்பு சிசிடிவி கேமிரா மீது, ஸ்பேர அடிக்கப்பட்டுள்ளது. மேலும், மிளகாய் பொடியும் வீசப்பட்டுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கோயிலுக்குள் இருந்த பஞ்சலோக விக்ரகங்கள், மற்ற உலோகங்களால் செய்யப்பட்ட பல சிலைகளை கொள்ளையர்கள் திருடியுள்ளதைக் கண்டுபிடித்துள்ளனர்.

இதனால், வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். திருடப்பட்டுள்ள சிலைகள், பல லட்சம் மதிப்புடையவை எனவும், அவை கிட்டதட்ட 600 ஆண்டுகள் பழைமையானவை என்றும் கோயில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS