பெரும் முதலாளிகளின் 68,607 கோடி கடன் தள்ளுபடி! ஏழைகளின் எதிர்காலம்?

29 April 2020 அரசியல்
nsitharaman.jpg

விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பெரும் பண முதலைகளின் கடன்களாக இருந்த 68,607 கோடியினை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளது.

இதுவரை 2014ம் ஆண்டு முதல் தற்பொழுது வரை, மத்திய அரசு சுமார் ஆறு லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கான, கடன்களை தள்ளுபடி செய்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரின் பொழுது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய அளவில் அதிக கடன் பெற்றுள்ள 50 நபர்களின் பெயர்களை வெளியிடுமாறு, ராகுல் காந்தி கூறினார்.

அதற்கு, ஆளும்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிதியமைச்சர் இது குறித்து வாய் திறக்கவே இல்லை. இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தினைப் பயன்படுத்தி, சாகேத் கோக்லே என்பவர் அந்த 50 பேரின் பெயர்களையும் வெளியிட கூறியிருந்தார். தற்பொழுது, அந்தப் பட்டியல் வெளியாகி உள்ளது. அத்துடன், சுமார், 68,607 கோடி ரூபாயானது தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதுகுறித்துக் கருத்து தெரிவித்துள்ள, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜகவிற்கு நெருக்கமான மெகுல் சோக்ஷி, விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் கடன்கள் தற்பொழுது ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த உண்மையை நாடாளுமன்றத்தில் தெரிவிக்காதது ஏன் என கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்விக் கடன், விவசாயக் கடன், மகளிர் கடன் என எதையும் கண்டு கொள்ளாத மத்திய அரசு, பெரும் பண முதலைகளின் கடன்களை வழக்கம் போல் தள்ளுபடி செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS