பாகிஸ்தானைப் போரில் வீழ்த்த 7-10 நாட்கள் போதும்! மோடி அதிரடி பேச்சு!

29 January 2020 அரசியல்
modiwar.jpg

இன்னொரு போர் என்று வந்தால், பாகிஸ்தானை வீழ்த்துவதற்கு ஏழு முதல் பத்து நாட்களே போதும் என, பாரதப் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

நேற்று நடைபெற்ற என்சிசி மாணவர்கள் கூட்டத்தில் பேசிய மோடி, ஜம்மூ மற்றும் காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தான் இரட்டை நாடகத்தினை அறங்கேற்றி வருகின்றது. மேலும், அந்த நாடு, பல ஆயிரம் பேரினை தற்பொழுது வரைக் கொன்றுள்ளது.

இதுவரை நடைபெற்றுள்ள மூன்று போர்களிலும், பாகிஸ்தான் தோல்வியினை மட்டுமே தழுவியுள்ளது. இன்னொரு போர் என்று வந்தால், பாகிஸ்தானை முழுமையாக வீழ்த்த ஏழு முதல் பத்து நாட்களேப் போதும். இதற்கு முன்னாள் ஆட்சி செய்தவர்கள், நம்முடைய இராணுவத்திற்கு முழு சுதந்திரத்தினை வழங்கவில்லை. ஆனால், தற்பொழுது நிலை வேறு.

நம்முடைய ஆட்சியில், நாம் நம்முடைய இராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளித்துள்ளோம். அதனால் தான், எல்லையைக் கடந்து சென்று, தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள இளைஞர்களின் எழுச்சியால் தான், தற்பொழுது இந்தியா வலிமை அடைந்து வருகின்றது. வருகின்ற பிப்ரவரி 26ம் தேதியுடன், நாம் தாக்குதல் நடத்தி ஒரு வருடம் ஆக உள்ளது.

புல்வாமா தாக்குதலில், சுமார் 40 சிஆர்பிஎப் படை வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தகுந்த பதிலடியினை, நம்முடைய இராணுவமும், விமானப் படையும் வழங்கியுள்ளது எனக் கூறினார்.

HOT NEWS