சரக்கு மீது 70-75% வரி! பொதுமக்கள் கூட்டம் அதிகரிப்பு!

05 May 2020 அரசியல்
liquorshop1.jpg

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மதுவிற்பனையானது கலைகட்டி உள்ளது. இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே-17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், மருத்துவத்திற்காகச் செல்ல வேண்டிய நோயாளிகள் கஷ்டப்பட்டார்களோ இல்லையோ, மதுபானப் பிரியர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்றேக் கூறலாம். மதுபானத்திற்கு அடிமையானவர்கள், அது கிடைக்காமல் போதைக்காக, சானிட்டைசர்கள், பினாயில், மெத்தனால், உள்ளிட்டவைகளை போதைக்காக குடித்து மரணமடைந்தனர்.

இது மட்டுமின்றி, கள்ளச் சாரயம், ஊறல் உள்ளிட்டவைகளைத் தயாரித்தும் வருகின்றனர். இந்நிலையில், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மதுபான விற்பனையானது அனுமதிக்கப்பட்டது. இதற்காக கிட்டத்தட்ட 40 நாட்களாக காத்திருந்த பொதுமக்கள், ஒயின்ஷாப்புகளுக்கு சென்று சூடம் காட்டி, ஆராத்தி எடுத்து, தேங்காய் உடைத்து வரவேற்றனர். கர்நாடகாவின் உள்ள பெல்காம் பகுதியில், முதலில் ஒயின்ஷாப்பிற்கு வந்த நபருக்கு, மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இரண்டு கிலோமீட்டருக்கு வரிசையில் நின்று, மதுபானம் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு செல்கின்றனர். ஒருவர், 92,000 ரூபாய்க்கு மதுபானம் வாங்கியுள்ளார். அதுமட்டுமின்றி, பலரும் அங்கேயே வாங்கிக் குடித்து விட்டு, பல ஆயிரம் ரூபாய்க்கு சரக்கு வாங்கியுள்ளனர். இந்த சூழ்நிலையினைப் பயன்படுத்தி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், மதுபானத்திற்கு சிறப்பு வரிகள் விதிக்கப்பட்டு உள்ளன.

டெல்லியில் ஒவ்வொரு மதுபானத்தின் மீதும், 70% கூடுதல் வரி விதிக்கப்பட்டு உள்ளது. அதனை எல்லாம், பொதுமக்கள் சட்டை செய்வதாகக் கூட இல்லை. தொடர்ந்து, சரக்குகளை வண்டியில் வந்து வாங்கிச் செல்கின்றனர். அதே போல், கர்நாடகா மற்றும் ஆந்திரா போன்ற மாநிலங்களில், 75% கூடுதல் சிறப்பு வரியானது விதிக்கப்படுகின்றன. இதனால், பொதுமக்கள் கஷ்டப்பட்டாலும், கடன்வாங்கி வந்து சாராயம் வாங்குகின்றனர்.

HOT NEWS