70 மருந்துகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன! மூன்று பேரிடம் சோதனை செய்யப்பட்டுள்ளது!

13 April 2020 அரசியல்
coronavacine.jpg

உலகம் முழுவதும் பரவி வருகின்ற கொரோனா வைரஸிற்குத் தற்பொழுது, 70 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக, உலக சுகாதார அமைப்புத் தெரிவித்து உள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் முதல், சீனாவில் இருந்து, உலகம் முழுக்க கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. இதனால், அமெரிக்கா கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. அதனைத் தொடர்ந்து, இத்தாலி, ஸ்பெயின், ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் வெகுவாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் முயற்சியில் பல நாடுகளும் ஈடுபட்டு உள்ளன.

இந்நிலையில், இது குறித்து உலக சுகாதார அமைப்பானது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகம் முழுவதும் சுமார் 70 மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அதில், ஒரு சில மருந்துகளானது, மூன்று தன்னார்வலர்களிடம் பரிசோதனையும் செய்யப்பட்டு உள்ளது என, தெரிவித்துள்ளது.

ஹாங்காங்கின் கேன்சினோ பயோலாஜிஸ்டிக்ஸ் ஐஎன்சி, பீஜிங் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் பயோடெக்னாலஜி முதலியவை இரண்டாம் கட்ட சோதனையில் ஈடுபட்டு உள்ளன. அமெரிக்காவின் மாடர்னா ஐஎன்சி, இனோவியோ பார்மாசூட்டிக்கல்ஸ் ஐஎன்சி போன்ற நிறுவனங்களும், மனிதர்கள் மீது சோதனையை ஆரம்பித்து உள்ளன.

உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களான ப்பைசர் ஐஎன்சி மற்றும் சனோபி உள்ளிட்டவைகள், தற்பொழுது முதற்கட்ட சோதனையில் ஈடுபட்டு உள்ளன எனவும் அந்த அமைப்புத் தெரிவித்துள்ளது. பொதுவாக, ஒரு மருந்தினைக் கண்டுபிடித்து மார்க்கெட்டிற்குக் கொண்டு வர பத்து முதல் பதினைந்து வருடங்கள் ஆகும். ஆனால், தற்பொழுது பரி வருகின்ற கொரோனா வைரஸானது அடுத்த ஆண்டே சந்தைக்கு வந்துவிடும் என்று கூறியுள்ளது.

HOT NEWS