நமீபியாவில் சோகம்! 7000 கடல் சீல்கள் மரணம்!

26 October 2020 அரசியல்
namibieaseal.jpg

ஆப்பிரிக்க நாடான, நமீபியாவில் 7000 கடல் சீல்கள் கடற்கரையில் கொத்து கொத்தாக மரணம் அடைந்து வருவது, அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

உலகளவில் பெருமளவிலான, இயற்கை மாற்றங்கள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. இதனால், சுற்றுச் சூழலில் திடீர் திருப்பங்களும், எதிர்பாராத மாற்றங்களும் நிகழ்ந்து வருகின்றன. தொடர்ந்து, கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஊரடங்கு உத்தரவானது, பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு உள்ளதால், ஓசோன் மட்டுமின்றி, காற்றும் சுத்தமாகி வருகின்றது.

இந்த சூழ்நிலையில், யாரும் எதிர்பாராத விதத்தில், நமீபியா நாட்டின் பெலிகண் பாய்ண்ட் பகுதியில் 7000 கடல் சீல்கள் எவ்விதக் காரணமும் இன்றி, கொத்துக் கொத்தாக இறந்து கரை ஒதுங்கி உள்ளன. இது குறித்து, ஓசன் கன்சர்வேஷன் அமைப்பானது, விரிவான விசாரணையினை செய்து வருகின்றது. அதன் முதற்கட்ட ஆய்வில், மிகப் பெரிய உண்மையினைக் கண்டுபிடித்து உள்ளது.

அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த மீன் இனம் ஒன்று, இந்த கடல் சீல்களுக்கு உணவாக இருந்து வந்துள்ளது. திடீரென்று அந்த மீன் இனம், அப்பகுதியில் இருந்து கூட்டமாக, வேறு பகுதிக்குச் சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக, உணவில்லாமல் அந்த கடல் சீல்கள் இறந்துள்ளன என கூறியுள்ளது. இது அப்பகுதியினரை, சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

HOT NEWS