75 கோடி கொசுக்களை பறக்கவிடும் அமெரிக்கா! கொசுக்களை ஒழிக்கே கொசுக்கள் தான் சாய்ஸ்!

21 August 2020 தொழில்நுட்பம்
mosquito121.jpg

அமெரிக்காவில் உள்ள கொசுக்களின் தொல்லையினை ஒழிக்க, 75 கோடி மரபணு மாற்றப்பட்ட கொசுக்களைப் பறக்க அமெரிக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

உலகம் முழுக்க கொசுத் தொல்லையானது, ஓயாத ஒன்றாக உள்ளது. இந்த கொசுக்களால், பலவித நோய்கள் நாளுக்கு நாள் தோன்றிய வண்ணம் உள்ளன. டெங்கு, காலரா, மலேரியா, ஜிகா வைஸ் உள்ளிட்டப் பலவித நோய்கள் பரவிய வண்ணம் உள்ளன. இந்த நோய்களால், பல கோடி மக்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படுகின்றனர்.

இந்த கொசுக்களைக் கட்டுப்படுத்தும் முயற்சியில், உலகின் பல நாடுகள் ஈடுபட்டு உள்ளன என்ற போதிலும், பெரிய அளவில் இந்த முயற்சியில் இதுவரை வெற்றிக் கிடைக்கவில்லை. இந்த சூழ்நிலையில், தற்பொழுது அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய விபரீத சோதனையில் ஈடுபட உள்ளனர். தற்பொழுது 75 கோடி மரபணு மாற்றப்பட்டக் கொசுக்களை, அமெரிக்கா முழுவதும் பறக்க விட உள்ளனர்.

இது குறித்து அமெரிக்காவின் என்விராம்மென்டல் டிஸ்ட்ரிக்ட் ஏஜென்சியானது, அனுமதி அளித்துள்ளது. இங்கிலாந்தினைச் சேர்ந்த அமெரிக்காவில் செயல்பட்டு வரும் ஆக்ஸிடெக் பெர்மிஷன் என்ற நிறுவனம் இந்த கொசுக்களை உருவாக்கி உள்ளது. இந்த கொசுக்களின் விஷேசம் குறித்து பின்வருமாறு.

இந்த 75 கோடி கொசுக்களும், முழுமையான ஆண் கொசுக்கள் ஆகும். இந்த ஆண் கொசுக்கள் அனைத்தும் இரத்தத்தினை உறிஞ்சிக் குடிக்காது. பெண் கொசுக்கள் தான், எப்பொழுதும் இரத்தத்தினை உறிஞ்சிக் குடிக்கும். பெண் கொசுக்கள் இரத்தத்தினை குடிப்பதன் மூலம் தான், முட்டையிட்டு குஞ்சு பொறிக்க இயலும்.

முட்டையிடுவதற்கு ஆண் கொசுக்கள் உதவி செய்யும். அந்தக் கொசுக்களுக்குப் பதிலாக, இந்த மரபணு மாற்றப்பட்ட ஆண் கொசுக்களான ஓஎக்ஸ்5034 என்றக் கொசுக்கள், பெண் கொசுக்களுடன் சேரும். இரண்டும் சேர்ந்த பின்னர், பெண் கொசுக்கள் முட்டையிடும். ஆனால், அந்த முட்டையில் இருந்து கொசுக்கள் வராது. அது பிறப்பதற்கு முன்பே, இறந்துவிடும். இவ்வாறு செய்வதன் மூலம், கொசுக்களின் எண்ணிக்கையினை, பெருமளவில் குறைத்துவிட முடியும் என்றுக் கூறப்படுகின்றது.

இதற்குப் பலரும் தற்பொழுது தங்களுடைய எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர். ஒருவேளைக் கொசுக்கள் இறந்துவிட்டால், அதனை உண்டு வாழும் பூச்சிகளின் வாழ்க்கை என்ன ஆகும் என்றுக் கூறுகின்றனர். மேலும், மனிதர்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படுமா என்றும் அச்சம் உண்டாகின்றது.

HOT NEWS