78,569 பேர் விருப்ப ஓய்வு! பிஎஸ்என்எல் ஊழியர்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்தது!

31 January 2020 அரசியல்
bsnl.jpg

பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் இருந்து, இன்று ஒரே நாளில், 78,659 பேர் விருப்ப ஓய்வினைப் பெற்றனர். இதுவும் கூட, ஒரு விதத்தில் சாதனை என்றுக் கூறலாம்.

ஏற்கனவே சம்பாளப் பாக்கி, நிர்வாக பிரச்சனை, நிதி நெருக்கடி உள்ளிட்டப் பலப் பிரச்சனைகளில் சிக்கித் தவித்து வந்தது. பிஎஸ்என்எல் நிறுனவம். இந்திய அரசாங்கத்திற்கு சொந்தமான, தொலைத் தொடர்பு நிறுவனம் ஆகும். மேலும், இதனைப் போன்று எம்டிஎன்எல் நிறுவனமும் உள்ளது.

தொடர்ந்து, தொழிலில் நிலவி வரும் போட்டி, வருமானப் பற்றாக்குறை காரணமாக, இதனால், 50 மற்றும் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள், விருப்ப ஓய்வு பெறலாம் என்ற அறிவிப்பினை, பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்தது. சம்பளப் பாக்கிப் பிரச்சனையால் அல்லாடிய ஊழியர்கள், இந்த விருப்ப ஓய்விற்கு விண்ணப்பித்தனர். அவர்களுடைய விண்ணப்பங்களை சரிபார்த்து வந்த பிஎஸ்என்எல் நிர்வாகமும், எம்டிஎன்எல் நிர்வாகமும், அந்த விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டது.

அதன்படி, பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் இருந்த ஒன்றரை லட்சம் பேரில், 78,569 பேர் விருப்பு ஓய்வு பெற்றனர். தற்பொழுது பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் வெறும், 75,217 பேர் மட்டுமே வேலை செய்கின்றனர். அதே போல், எம்டிஎன்எல் நிர்வாகத்தில் இருந்து, 14,378 பேர் ஓய்வு பெற்றனர்.

HOT NEWS