சிஏஏ சட்டத்திற்கு எதிராக 70 லட்சம் பேர் இணைந்த மனித சங்கிலி! கேரளாவில் போராட்டம்!

27 January 2020 அரசியல்
keralahumanchain.jpg

சிஏஏ சட்டத் திருத்தம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, நாடு முழுவதும் போராட்டங்கள், கலவரங்கள், வன்முறைகள் உள்ளிட்டவை நடந்து கொண்டு இருக்கின்றன.

கேரளாவில் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என, அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதே போல், மேற்கு வங்கம், பஞ்சாப், ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் இந்த சட்டத்தினை அமல்படுத்தாது என அம்மாநில முதல்வர்கள் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில், கேரளாவில் குடியரசுத் தினத்தினை முன்னிட்டு, சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இதில், கேரள முதல்வர் பினராய் விஜயன் கலந்து கொண்டார். அவர் தலைமையில், சுமார் 70 லட்சம் பேர் இந்த பிரம்மாண்டமான மனித சங்கிலிப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டமானது, காஸராக்காடு முதல் களியக்காவிளை வரை நடைபெற்றது.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற முதல்வர் பினராய் விஜயன், இந்த மனித சங்கிலிப் போராட்டமானது ஒரு பெரிய சுவர். இந்த சட்டமானது நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக உள்ளது. கேரளா தன்னுடைய மண்ணில் சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் உள்ளிட்ட சட்டங்களை அனுமதிக்காது என்பதில் தெளிவாக உள்ளது என்றுக் குறிப்பிட்டார்.

மாலை, சரியாக நான்கு மணியளவில் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில், கேரளப் பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு, கேரள முதல்வருக்கு தங்களுடைய ஆதரவினையும், சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பினையும் தெரிவித்தனர்.

HOT NEWS