இன்று நடைபெற்ற மாநிலங்களைவைக் கூட்டத்தில், அமளியில் ஈடுபட்ட எட்டு உறுப்பினர்கள் தற்பொழுது அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
தற்பொழுது நடைபெற்று வருகின்ற மாநிலங்களவைக் கூட்டத் தொடரில், வேளாண் மசோதாவானது தாக்கல் செய்யப்பட்டு, அதன் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது. இதற்கு எதிர்கட்சி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் எதிர்ப்பினை மீறி நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில், இந்த மசோதா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்த மசோதாவினை நிறைவேற விடாமல் தடுத்துக் கொண்டே இருந்த எட்டு மாநிலங்களவை உறுப்பினர்களை, மாநிலங்களைவைத் தலைவர் வெங்கையா நாயுடு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். டெரிக் ஓப்ரைன், சஞ்சய் சிங், ராஜீவ் சதவ், கேகே ராகேஷ், சையத் நாசிர் உசேன், ரிபுன் போரா, டோலா சென், இளமாறன் கரீம் ஆகியோர் தற்பொழுது சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.