ஜம்மூவில் 8 தீவிரவாதிகள் சுட்டுத் தள்ளப்பட்டனர்! இந்திய இராணுவம் அதிரடி!

20 June 2020 அரசியல்
indiansoldiers.jpg

ஜம்மூ காஷ்மீரில் நடைபெற்ற தாக்குதலில், எட்டு தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

கடந்த சில வாரங்களாக பாகிஸ்தான் நாட்டில் இருந்து, பல தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுறுவிய வண்ணம் உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில், இந்திய இராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த மாதத்திற்குள் மட்டும் 30ற்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை, இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது. அதேபோல், மற்றொரு சம்பவம் தற்பொழுது நடைபெற்று உள்ளது.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள சோபியான் மற்றும் புல்வாமா உள்ளிட்ட மாவட்டங்களில், தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக, இந்திய இராணுவத்தினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, இந்திய இராணுவத்தினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். இந்திய இராணுவத்தினர் வந்ததைத் தெரிந்து கொண்ட தீவிரவாதிகள், இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.

அவர்களின் தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது, இந்திய இராணுவம். இந்தத் தாக்குதலில் ஒரு தீவிரவாதிக் கொல்லப்பட்டார். தங்களைக் காப்பாற்றிக் கொள்ள, அங்குள்ள மசூதியில் தீவிரவாதிகள் தஞ்சமடைந்தனர். இந்நிலையில், இரண்டு தீவிரவாதகள் மசூதிக்குள் இருப்பதை இராணுவத்தினர் உறுதி செய்தனர். அவர்களை வெளியே வரவழைக்க, கண்ணீர் புகைக் குண்டுகளை உள்ளே வீசினர்.

இதனைத் தொடர்ந்து, வெளியில் வந்த தீவிரவாதிகளை இந்திய இராணுவத்தினர் சுட்டு வீழ்த்தினர். மேலும், மற்றொருப் பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 4 தீவிரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டனர். தொடர்ந்து ஒரே நாளில், எட்டு தீவிரவாதிகளை இந்திய இராணுவம் சுட்டு வீழ்த்தியுள்ளது.

HOT NEWS