சிறப்பு ரயில்களில் பயணிக்கும் பொழுது 80 பேர் மரணம்! ரயில்வே அறிக்கை!

02 June 2020 அரசியல்
trainshramik.jpg

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பொதுமக்களின் போக்குவரத்த்திற்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

கடந்த மார்ச் 25ம் தேதி அன்று, மத்திய அரசு ஊரடங்கு உத்தரவினை அறிவித்தது. இதனால், பொதுப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்நிலையில், பல லட்சம் புலம் பெயரும் தொழிலாளர்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் வாகனங்கள் கிடைக்காமல் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

பல லட்சம் பேர், டெல்லி, உத்திரப் பிரதேசம், குஜராத், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து நடைபயணமாக, தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு நடைபயணமாக சென்று வருகின்றனர். ஒரு சிலர் கிடைக்கின்ற வாகனங்களில் ஏறி செல்கின்றனர். பலரும் சாலையில் மயங்கி விழுந்தனர். ஒரு சிலர் மரணம் அடைந்தனர். இந்நிலையில், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இருந்து, இந்தியாவின் 15 மாநிலங்களுக்கு ரயில்களை இயக்கியது இந்தியன் ரயில்வே.

பின்னர், அதனைத் தொடர்ந்து செராமிக் சிறப்பு ரயில்கள் என்றப் பெயரில் 200 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மே ஒன்றாம் தேதி தொடங்கி தற்பொழுது வரை, 3840 ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் பல லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். 130 கோடி பேர் இருக்கின்ற பாரத நாட்டில், கொரோனாவைரஸ் வேகமாகப் பரவி வருகின்ற சூழ்நிலையில், புலம் பெயரும் தொழிலாளர்களுக்காக தற்பொழுது தான் இரயில்கள் இயக்கப்படுகின்றன.

பெரும்பாலும் டெல்லி, மஹாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கே இந்த ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் உடல்நலம் இல்லாதவர்கள் பயணம் செய்ய வேண்டாம் என, ரயில்வே தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டும் உள்ளது. இந்நிலையில், தற்பொழுது வரை சுமார் 80க்கும் மேற்பட்டோர் இந்த ரயில்களில் பயணம் செய்யும் பொழுது மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

HOT NEWS