8000 ஆண்டுகள் பழமையான முத்து!

21 October 2019 அரசியல்
abudhabipearl.jpg

அபுதாபியில், 8000 ஆண்டுகள் பழமையான அரிய வகை முத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது, அபுதாபியில், தொல்பொருள் ஆராய்ச்சி நடைபெற்று வருகின்றது. அந்த ஆராய்ச்சியில், பலங்காலப் பொருட்கள் பலவற்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

பீங்கான் பொருட்கள், கல்லால் ஆன சிற்பங்கள், கல்லால் உருவாக்கப்பட்ட பொருட்கள் என, பல விதமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், பழுப்பு நிறத்தில் பாசி போல ஒன்றினைக் கண்டுபிடித்தனர்.

அதனை ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி, ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில், அது முத்து என்றும், அது கற்காலத்தின் கடைசியினைச் சேர்ந்தது என்றும், சுமார் 8000 ஆண்டுகள் பழமையானது என்றும் கண்டுபிடித்துள்ளனர். இதனை தற்பொழுது அபுதாபி அருங்காட்சியகத்தில், அபுதாபி முத்து எனப் பெயரிட்டு, காட்சிக்கு வைத்துள்ளனர்.

HOT NEWS