கேரளாவில் 806 பேர் மீது கொரோனா வைரஸ் காரணமாக கண்காணிப்பு! 20 பேருக்கு சிகிச்சை!

30 January 2020 அரசியல்
coronavirus1.jpg

கேரளாவில் தற்பொழுது 806 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என, தீவிரக் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

சீனாவில் இருந்து கடந்த வாரம் வரை சுமார் 806 பேர், கேரளாவிற்கு வருகை தந்துள்ளனர். இதனையடுத்து, இந்த வைரஸ் தாக்குதல் மற்றவர்களுக்கு பரவி விடாமல் இருக்க, இவர்களை தனியாக அழைத்து தீவிர கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 20க்கும் மேற்பட்டவர்களை, தனியாக வெவ்வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கின்றனர். மேலும், அனைவருடைய ரத்த மாதிரியையும் தனியாக கொரோனா வைரஸ் நோயினை கண்காணிக்கும் அமைப்பிற்கு, அனுப்பி வைத்து சோதனை செய்து வருகின்றனர். மேலும், 0471-255-2056 என்ற டோல் ப்ரீ எண்ணும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த எண்ணினைத் தொடர்பு கொண்டு, கொரோனா வைரஸ் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மையங்களைப் பற்றி கேரளாவில் தெரிந்து கொள்ளலாம்.

திருவனந்தபுரம் விமான நிலையத்தில், தெர்மல் ஸ்கேனிங் வசதியும் செய்யப்பட்டுள்ளது. அங்கு வருகின்ற அனைத்து பயணிகளுமே, இங்கு ஸ்கேன் செய்யப்படுகின்றனர்.

HOT NEWS