தொடர்ந்து 36 வருடங்களாக நில மோசடியில் ஈடுபட்ட, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு மத்திய அரசு 84 கோடி ரூபாயினை அபராதமாக விதித்துள்ளது.
டெல்லியில் உள்ள சன்சாத் மார்க் என்றப் பகுதியில் உள்ள அரசிற்கு சொந்தமான நிலத்தில், பிடிஐ செய்தி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. 1984ம் ஆண்டு இந்த நிலத்தினை அரசிடம் இருந்து குத்தகைக்கு எடுத்தது பிடிஐ நிறுவனம். அப்பொழுது அங்கு கட்டிடத்தினைக் கட்டி அங்கு செயல்பட்டு வருகின்றது. கடந்த 36 ஆண்டுகளாக அந்த நிலத்திற்கான குத்தகைப் பணத்தினைத் தற்பொழுது வரை, அந்த நிறுவனம் செலுத்தவே இல்லை என, மத்திய வீட்டு வசதி அமைச்சகம் குற்றம் சாட்டி உள்ளது.
ஏற்கனவே உருவாக்கப்பட்ட ஒப்பந்தங்களை மீறி, இந்த நிறுவனம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்து உள்ளது. இதனைத் தொடர்ந்து, வருகின்ற ஆகஸ்ட் ஏழாம் தேதிக்குள் மொத்தமாக 84.48 கோடி ரூபாயினை அபராதமாக செலுத்த வேண்டும் என்றுக் கூறியுள்ளது. அவ்வாறு குறிப்பிட்ட நேரத்திற்குள் செலுத்தாவிட்டால், கண்டிப்பாக 10% வட்டி விதிக்கப்படும் எனவும், அதனையும் சேர்த்து செலுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.