9 புலம்பெயரும் தொழிலாளர்கள் கிணற்றில் விழுந்து தற்கொலை!

23 May 2020 அரசியல்
imigrantssuicide.jpg

ஒன்பது புலம்பெயுரும் தொழிலாளர்கள், கிணற்றில் பிணமாக கிடந்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, வருகின்ற மே-31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால், பல லட்சம் புலம்பெயரும் தொழிலாளர்கள் சாலைகளில் பல நூறு கிலோமீட்டர்கள் நடந்தே சென்று, தங்களுடைய சொந்த ஊர்களுக்குச் செல்கின்ற சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

இந்த சூழ்நிலையில், ஹைதராபத் நகரில் உள்ள வாரங்கால் மாவட்டம், கோரிகுண்டா கிராமத்தில் ஒரு பரபரப்பான சம்பவம் நடைபெற்று உள்ளது. அந்தக் கிராமத்தில் உள்ள திறந்த வெளிக்கிணற்றில் ஒன்பது பிணங்கள் மிதந்து கொண்டிருப்பதாகக் தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, அவைகளை மீட்ட தீயணைப்புத் துறையினர் போஸ்ட்மார்ட்டத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவைகளில் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மேற்கு வங்கத்தினைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் அவர்கள் என்பதும், நோய் மேலும் பரவாமல் இருக்க தற்கொலை செய்து கொண்டுள்ளனர் எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. சணல் கயிறு தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றிய மக்சூத் ஆலாம், அவருடைய மனைவி நிஷா ஆகியோர் ஆந்திரப் பிரதேசத்திற்கு வேலைக்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வந்துள்ளனர்.

அவர்களுக்கு புசாரா காத்துன், பேரன் பேபி சக்கீல், மற்றும் மகன்கள் சோகேள், சாபத் ஆகியோர் இருந்துள்ளனர். இவர்கள் கூட்டாக, அந்தக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டு உள்ளனர். இந்நிலையில், அதேக் கிணற்றில் பீகாரினைச் சேர்ந்த ஸ்ரீராம், சியாம் மற்றும் திரிபுராவினைச் சேர்ந்த சாக்கீள் அஹமத் ஆகியோரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவர்கள் அனைவருமே கூலி வேலை செய்பர்கள். இவர்கள் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்கள் என, யாருக்கும் தெரியவில்லை. இவ்வாறு ஒரே கிணத்தில் ஒன்பது பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம், பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

HOT NEWS