பல ஆயிரம் பேருக்கு கொரோனா அறிகுறி! பஞ்சாபில் பயங்கரம்!

24 March 2020 அரசியல்
coronavirus18.jpg

பஞ்சாப் மாநிலத்தில் இருந்து வெளிநாடுகளுக்குச் செல்லும் மக்களின் எண்ணிக்கையானது, மற்ற மாநிலங்களை விட அதிகமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், பஞ்சாப் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பல்பீர் சிங், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹ்ரசவர்தனுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.

அதில், பஞ்சாப் மாநிலத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து சுமார் 90,000 பேர் வந்ததாகவும், அவர்களிடம் கொரோனா வைரஸ் தொற்று சோதனை நடத்தியதாகவும், அதில் பல ஆயிரம் பேருக்கு, இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது எழுதியுள்ளார்.

இதனால், மாநில அரசிற்கு உடனடி நிவாரணமாக, 150 கோடி ரூபாய் தேவைப்படுகின்றது எனவும் அவர் எழுதியுள்ளார். பல ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனக் கண்டறிந்துள்ள பஞ்சாப் மாநில அரசாங்கம், தற்பொழுது கலங்கிப் போய் உள்ளது. அடுத்து என்ன செய்வதென்று தெரியாமலும் உள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக, லாக்டவுன் முறையினை அனுமதித்தது பஞ்சாப் மாநில அரசு தான்.

தற்பொழுது வரை, பஞ்சாப் மாநிலத்தில், 23 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. பலரை, தனிமைப்படுத்திக் கண்காணித்தும் வருகின்றனர். இந்த எண்ணிக்கையானது, வரும் காலத்தில் அதிகரிக்கலாம் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS