இந்திய வங்கிகளில் 958 பில்லியன் ரூபாய்க்கு ஊழல்! நிதியமைச்சர் தகவல்!

20 November 2019 அரசியல்
nirmalasitharaman1.jpg

இந்தியாவில், மாநில வங்கிளில் தற்பொழுது வரை 958 பில்லியன் ரூபாய் அளவிற்கு குற்றம் நடந்திருப்பதாக, மத்திய நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அவர் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டியில், இதனைத் தெரிவித்தார். இந்தக் குற்றங்களானது, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலானக் குறுகியக் காலத்திற்குள் நடைபெற்று இருப்பதாகவும் கூறியுள்ளார்.

ராஜ்யசபாவிற்கு, எழுத்து மூலம் இது பற்றி விளக்கியிருக்கும் நிதியமைச்சர், இதுவரை சில வருடங்களாக மொத்தமாக 5743 வழக்குகள் வங்கிப் பணமோசடி குறித்துப் பதிவாகியிருப்பதாகவும், அதில் 1000க்கும் மேற்பட்ட வழக்குகள் 2,500 கோடி ரூபாய் மதிப்புடையவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த இரண்டு நிதியாண்டுகளில், சுமார், 338,000 லட்சம் வங்கிக் கணக்குகளை முடக்கி இருப்பதாகவும், செயல்படாத வங்கிக் கணக்குகளை கவனித்து வருவதாகவும் கூறியுள்ளார். இந்திய அளவில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 25,400 கோடி ரூபாய் அளவிற்கும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 10,800 கோடி ரூபாய் அளவிற்கும், பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் 8,300 கோடி ரூபாய் அளவிற்கும் மோசடி நடைபெற்று இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS