சீனாவில் மீண்டும் பரவும் கொரோனா வைரஸ் 900க்கும் அதிகமானோர் பாதிப்பு!

03 May 2020 அரசியல்
coronachina20.jpg

சீனாவில் தற்பொழுது மீண்டும் கொரோனா வைரஸானது, பரவி வருகின்றது. இதுவரை, 900 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்பொழுது(02-05-2020) சீனாவில், உழைப்பாளர் தின விடுமுறையானது ஐந்து நாட்களாக கொண்டாடப்படுகின்றது. இருப்பினும், அங்கு வெளியில் கூட்டம் கூடவோ, கொண்டாடவோ அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், கொரோனா வைரஸின் பிறப்பிடமாகக் கருதப்படுகின்ற ஹூபேய் மாகாணத்தின், ஊஹான் பகுதியில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது.

இந்த முறை, எவ்வித அறிகுறியும் இல்லாமல் பரவ ஆரம்பித்து உள்ளது. இதனால், 980க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதையும், சீன அரசாங்கம் கண்டறிந்துள்ளது. இவர்களில், 631 பேர் ஹூபேய் மாகாணத்தினைச் சேர்ந்தவர்கள் எனவும், அவர்கள் வெளிநாட்டுப் பயணங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் எனவும், கண்டறியப்பட்டு உள்ளது. இதனால், இவர்களுடன் தொடர்பில் இருந்ததாக கருதப்படுகின்ற இரண்டேகால் லட்சம் பேரிடம், தற்பொழது தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த முறையும், எவ்வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடாமல், விரைவில் இந்த பாதிப்பினைக் குறைக்க சீனா தீவிரம் காட்டி வருகின்றது. மேலும், இந்த விடுமுறைக் காலத்தினைப் பயன்படுத்தி, எளிதாக நோயினையும், நோயாளிகளையும் அடையாளம் காண முடியும் என்பதால், சீன அரசாங்கம் முழு வீச்சில் இறங்கியுள்ளது.

அதன் முதற்கட்ட விசாரணையில், 115 பேர் நேரடியாக, வெளிநாடு சம்பந்தங்கள் மற்றும் தொடர்புகள் இந்த நோய் பாதிப்பினை அடைந்துள்ளனர். இதில், மிகப் பெரிய விஷயமாகக் கருதப்படுவது என்னவென்றால், இந்த நோயானது தற்பொழுது எவ்வித அறிகுறியும் இல்லாமல் பரவி இருப்பது தான். இதனால், மருத்துவர்கள் மத்தியில், பீதி நிலவுகின்றது.

HOT NEWS