ஆணுறுப்பின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்? பெண்களுக்கு எது பிடிக்கும்?

24 January 2020 உடல்நலம்
penissize.jpg

தன்னுடைய ஆணுறுப்பு மிகச் சிறியதாக இருக்கின்றதே என, பலருக்கும் ஒரு சில சந்தேகங்கள் உண்டு. ஒரு சிலர் தங்களுடைய நண்பர்களிடம் இது பற்றிப் பேசுகின்றனர். ஆனால், ஒரு சிலருக்கு கூச்சத்தின் காரணமாக இதுபற்றி யோசிக்காமலேயே விட்டுவிடுகின்றனர்.

உண்மையில், இது ஜீன் சம்பந்தப்பட்ட விஷயம் ஆகும். உறுப்பின் அளவிற்கும், உடலுறவிற்கும் சம்பந்தம் இல்லை என, ஆய்வாளர்களும், மருத்துவர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால், பெண்களின் மனநிலை வேறு. ஆணுக்கு பெரிதாக இருந்தால் தான், அவனால் சிறப்பாக உடலுறவில் ஈடுபட முடியும் என நம்புகின்றனர். அவர்களின் ஆசையும் அதுவாகவே இருக்கின்றது.

ஒவ்வொரு நாட்டு ஆணிற்கும், ஆணுறுப்பின் அளவானது மாறுபடுகின்றது. சாதாரண நிலையில், ஒரு ஆணுக்கு 2 முதல் 2.5 இன்ச் அளவிலும், விறைப்படைந்த நிலையில் 5 முதல் 6.5 இன்ச் வரையிலும் இருக்கும். அதற்கு மேலோ அல்லது கீழோ இருந்தால் தான், நாம் மருத்துவரை அணுக வேண்டி இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், பெரும்பாலான ஆண்களுக்கு 5 முதல் 5.5 இன்ச் அளவிலான ஆணுறுப்பே விறைப்படைந்த நிலையில் இருக்கும். நூற்றில் 5 பேருக்கு மட்டுமே 6 இன்ச் என்ற அளவில் இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதே போல் நூற்றில் 5 பேருக்கு மட்டுமே, 3 இன்ச்க்கும் குறைவான அளவில் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

பெண்களைத் திருப்திபடுத்துவதற்கு இரண்டு முதல் 3 இன்ச் உடைய ஆணுறுப்பே போதுமானதாக இருக்கும் என, உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். அதீத கைப்பழக்கம், புகைப்பிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் தவறான உணவுமுறைகளின் காரணமாக, ஆணுறுப்பு சிறுத்துவிடுகின்றது.

உலகளவில் டென்மார்க் நாட்டினைச் சேர்ந்தவர்களின் ஆணுறுப்பு தான் பெரியதாக உள்ளதாக ஒரு ஆய்வு தெரிவிக்கின்றது. அங்கு வாளும் ஆண்களின் ஆணுறுப்பானது 7.59 இன்ச்கள் சராசரியாக இருக்கும் எனவும், அவர்களைத் தொடர்ந்து இத்தாலி நாட்டினைச் சேர்ந்தவர்களுக்கு 7.44 இன்ச்கள் இருக்கும் எனவும், ஸ்வீடன் நாட்டினைச் சேர்ந்தவர்களுக்கு 7.43 இன்ச்கள் இருக்கும் எனவும், ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்தவர்களுக்கு 7.41 இன்ச்கள் இருக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பிரான்ஸ் நாட்டினருக்கு 6.2 இன்ச்ம், ஜெர்மனி நாட்டினைச் சேர்ந்தவர்களுக்கு 5.6 இன்ச்ம், அமெரிக்காவினைச் சேர்ந்தவர்களுக்கு 5.4 இன்ச்ம், இந்தியாவினைச் சேர்ந்தவர்களுக்கு 5 இன்ச்ம் சராசரியான அளவாக கருதப்படுகின்றது. இந்த அளவு இருந்தாலே, நம்முடைய உடலால், தேவையான அளவிற்கு உடலுறவில் ஈடுபட முடியும் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

HOT NEWS