இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்ரேலிலும் மோடி தான் பிரபலம்!

13 July 2019 அரசியல்
modiphotoinisrael.jpg

நரேந்திர மோடியின் புகழ் இந்தியாவில் மட்டுமல்ல, இஸ்ரேலிலும் கொடிகட்டிப் பறக்கிறது. அங்கு செப்டம்பரில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக, பிரதமராக உள்ள பெஞ்சமின் நெத்தன்யகூ போட்டியிடுகிறார். இதன் காரணமாக, அவரும் அவருடையக் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், அங்குள்ள கட்டிடத்தில், பெஞ்சமின் சந்தித்த, உலகின் பெரியத் தலைவர்களின் புகைப்படங்கள் தொங்கவிடப்பட்டுள்ளன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய, பிளக்ஸ் தொங்கவிடப்பட்டுள்ளது.

இதனை அந்நாட்டு ஊடகங்கள் தற்பொழுது வைரலாக்கி வருகின்றன. செப்டம்பர் 17ல் நடைபெற உள்ள தேர்தலில், லிகுத் கட்சியின் சார்பாக பெஞ்சமின் போட்டியிடுகிறார். அவரும், மோடியும் நண்பர்களாக இருக்கின்றனர். இதனையொட்டியே அவர்களுடையப் புகைப்படம் அங்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். மேலும், பிரதமர் மோடியின் புகழ் தற்பொழுது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இதனைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். எது எப்படியோ, நம் இந்தியப் பிரதமரின் புகைப்படம் இஸ்ரேலில் இருப்பது நமக்குப் பெருமை தானே!

HOT NEWS

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

அமெரிக்காவுக்கு ஆப்படித்த மோடி-இனி ரூபாயில் எண்ணெய் வாங்க முடிவு

24 May 2019 அரசியல்
modi1.jpg

ஈரானிடம், இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு, அமெரிக்கா கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து வந்தது. இதனை சற்றும் மதிக்காத இந்தியா ஈரானிடம் பெருமளவிலான கச்சா எண்ணெயை வாங்குவதற்கு ஒப்பந்தமிட்டது.

இதனால், இந்தியா மீதுப் பொருளாதாரத் தடை விதிக்கப்படும் என, அமெரிக்க மிரட்டல் விடுக்கப்பட்ட போதிலும், வியாபாரத்தின் காரணமாக இன்று வரை பொருளாதாரத் தடை விதிக்கப்படவில்லை.

மேலும், தற்பொழுது புதிய தகவல் பரவி வருகிறது. அதன் படி, தற்பொழுது, இந்தியா ஈரானிடம், டாலரில் எண்ணெய் வாங்காமல் ரூபாயில் வாங்க உள்ளதாக, தகவல் பரவியுள்ளது. பாதி ரூபாயாகவும், மீதிப் பணத்திற்கு உற்பத்தி மற்றும் மூலப் பொருட்கள் மூலம் ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

ஈரான் தற்பொழுது, குறைந்த விலைக்கு எண்ணெய் விற்கிறது. மேலும், ஈரானிடம் எண்ணெய் வாங்கி 60 நாட்களுக்குப் பின், பணம் தந்தால் போதும் என்ற காரணங்களுக்காக, இந்தியா தற்பொழுது ஈரானிடம் எண்ணெய் வாங்க உள்ளது.

HOT NEWS