நீங்கள் ஏ பிரிவு இரத்தம் உள்ளவரா? கவனமாக இருங்க! பகீர் தகவல்!

19 March 2020 அரசியல்
bloodgroup.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவி வருகின்ற கோவிட்19 எனப்படும் கொரோனா வைரஸானது, ஏ பிரிவு இரத்தம் உள்ளவர்களை அதிகம் பாதிக்கும் என்ற பகீர் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த டிசம்பர் மாத இறுதியில், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து பரவ ஆரம்பித்த வைரஸானது, உலகின் 117 நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸால் தற்பொழுது வரை, 8,000க்கும் அதிகமானோர் மரணமடைந்துள்ளனர், 2,15,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 85,000 பேர் வெற்றிகரமாக சிகிச்சைப் பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், சீனாவின் ஊஹான் பகுதியில் பாதிக்கப்பட்டவர்களிடம், தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதில், ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, ஏ பிரிவு இரத்தத்தினை உடையவர்களிடம் தான், இந்த வைரஸ் தொற்று அதிகமாகப் பரவி வருகின்றது.

ஏ பாசிட்டிவ், ஏ நெகட்டிவ், ஏபி பாசிட்டிவ், ஏபி நெகட்டிவ் உள்ளிட்ட இரத்தப் பிரிவினைச் சேர்ந்தவர்களிடம் தான், இந்த வைரஸானது விரைவாகப் பரவுகின்றது எனவும், பி பிரிவு மற்றும் ஓ பிரிவு இரத்தத்தினை உடையவர்களிடம் அதிகமாகப் பரவுவதில்லை எனவும், ஆனால், பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஏ வகை இரத்தத்தினை உடையவர்கள் எனவும் கூறப்பட்டு உள்ளது.

அதே போல், ஏ பிரிவினரை மட்டும் பாதிக்கும் என்று கருதக் கூடாது எனவும், ஓ மற்றும் பி பிரிவினரை பாதிக்கவே பாதிக்காது எனவும் கருதக் கூடாது என்றும் அந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

HOT NEWS