ஏ1 திரைவிமர்சனம்! படம் எப்படி இருக்கு?

27 July 2019 சினிமா
a1review.jpg

ஒரு சிரிப்பு அணுகுண்டை கொளுத்தத் தயாரா? அப்படி என்றால் இந்தப் படத்திற்கு சென்று ரசியுங்கள். கண்டிப்பாக, இந்தப் படம் உங்களை ஏமாற்றாது. அப்படி ஒரு நல்ல காமெடி கலாட்டா நிறைந்த திரைப்படம் தான் இந்த ஏ1.

படத்தில், பிராமண சமூகத்தைச் சேர்ந்தப் பெண், தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த பையனையேத் திருமணம் செய்து கொள்ளவிரும்புகிறார். விதி, லோக்கல் கையான சந்தானத்தை பிராமணர் என எண்ணி, காதலிக்கிறார். பின், அவர் பிராமணர் இல்லை எனத் தெரிந்ததும், அவரைப் பிரிகிறார். பின் மீண்டும் ஒரு காரணத்திற்காக சேர்கிறார்.

இதனால், சந்தானம் தன் குடும்பத்துடன் பெண் வீட்டிற்கு செல்கிறார். அவமானம் அடைகிறார். அதற்குக் காரணம் பெண்ணின் தந்தையான தாசில்தார். மிக சுத்தமான கைக்குச் சொந்தக்காரர். எப்படி, சந்தானம், கதாநாயகியின் கை பிடித்தார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.

ஆனாலும், இந்த லொல்லு சபா கூட்டம் படத்தில் செய்திருக்கிற கலாட்டா இருக்கே, ஐய்யய்யோ! அப்பா சாமி, சிரிக்க முடியல! நண்பனை அவமானப்படுத்தியால், கதாநாயகியின் தந்தையைக் கொன்றே விடுகின்றனர். அதை நீங்கள் சீரியஸாகப் படிக்காமல், ஜாலியாகப் படித்துப் பாருங்கள். திரையில் வரும் காட்சிகளை உங்களால் கற்பனை செய்துப் பார்க்க முடியும்.

படம் முழுக்க காமெடி, கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் காதல் என படத்தில் நம்மை முழுமையாகத் திருப்திப்படுத்தியுள்ளார் இயக்குநர் ஜான்சன். சந்தானத்தின் காமெடி எப்பொழுதுமே தனி ரகம்தான். டைமிங் பஞ்ச்சுகள், எதார்த்தமான பேச்சு என இந்தப் படத்திலும், தன்னுடைய முழுமையானப் பலத்தைக் காட்டி வெற்றி பெற்றிருக்கிறார்.

சந்தோஷ் நாராயணன் இசையில், படத்தின் பாடல்கள் சுமார் ரகம். பின்னணி இசை நன்றாக உள்ளது. காமெடி படத்தின் மிகப் பெரிய பலமே நேரம் தான். நீண்ட நேரம் என்றால், படம் மொக்கையாகி விடும் என்பதை உணர்ந்த இயக்குநர், தெளிவாக, படத்தினை ஒன்றே முக்கால் மணி நேரத்தில் முடித்துள்ளார். இதுவே படத்தின் வெற்றி.

ஏ1-ஏ கிளாஸ்

ரேட்டிங் 3/5

HOT NEWS