படத்திற்கு பர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே பல எதிர்ப்புகள். பிரச்சனைகள், தொல்லைகள். இதுபோதாதென்று, கேடிஎம் பிரச்சனை வேறு. படமும் சொன்ன நேரத்திற்கு வெளியாவில்லை. தாமதமாகவே வெளியாகியது.
படத்தில் நடித்துள்ள அமலாபாலுக்கு வாழ்த்துக்கள். அவர், தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார். படத்தின் இயக்குநர் திரு. ரத்னகுமார். முதல் படமான மேயாதமான் ஒரு வகைக் கதை. இந்தப் படம் ஒரு வகைக் கதை.
படத்தின் இரண்டாம் பாதி முழுக்க, நிர்வாணமாக வருகிறார் அமலாபால். இருப்பினும், அதில் துளி அளவு கூட ஆபாசம் இல்லை. அந்த அளவிற்கு மெனக்கெட்டு படமாக்கியிருகிறார்கள் ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன். பெமினிஸம் பேசிக்கொண்டு பெண்கள் செய்யும் தவறுகளால், என்னென்ன விபரீதம் ஏற்படுகிறது என சுளீரென்று கூறியிருப்பதில் இயக்குநர் வெல்கிறார்.
டிவி சேனலில் பிராங்க் நிகழ்ச்சி நடத்தும் பெண்ணாக காமினி என்னும் கதாப்பாத்திரத்தில் அமலாபால். பெமினிஸம் பேசிக் கொண்டு சரக்கு, தம் என அனைத்தையும் பயன்படுத்துகிறார். ஒரு நாள் தன் தோழியிடம் நிர்வாணமாக அமர்ந்து டிவியில் செய்திகள் வாசிப்பேன் என பெட் கட்டித் தோற்கிறார். பின்னர், ஆடைகளைக் கலைந்து, தன் நண்பர்களுடன் அமர்ந்து, குடிக்கிறார். அந்த கட்டிடம் ஒரு காலியான கட்டிடம். பின்னர், காலையில் எழுந்து பார்க்கிறார். உடம்பில் ஒட்டுத் துணிக் கூட இல்லை. அந்தக் கட்டிடமும் காலியாக உள்ளது. அங்கிருந்த நண்பர்கள் எங்கே எனத் தெரியவில்லை. அமலாபால் இப்படி ஆனதற்கு யார் என்றும் தெரியவில்லை. இந்நிலையில், அமலாபால், தன் மாணத்தைக் காக்க, என்ன செய்கிறார், எப்படி அந்தக் கட்டிடத்தில் இருந்து வெளியேறுகிறார் என்பது தான் படத்தின் மீதிக் கதை.
படத்தின் முதல் பாதி ஜாலியாக சென்றாலும், இரண்டாம் பாதி விறுவிறுப்பாக செல்கிறது. சுதந்திரத்திற்கும் கட்டுப்பாடு உண்டு என்பதை எவ்வித சிக்கலும் இல்லாமல் தெளிவாக படமாக்கியதில் இயக்குநர் வெற்றிப் பெறுகிறார்.
ஆடை-உண்மையைத் தோலுரித்துக் காட்டுகிறது.