சமூக வலைதளங்களுடன் ஆதாரை இணைக்கும் திட்டம் இல்லை! மத்திய அரசு அறிவிப்பு!

06 February 2020 அரசியல்
aadhaarcard.jpg

சமூக வலை தளங்களுடன், ஆதார் அடையாள அட்டையினை இணைக்கும் திட்டம் இல்லை என, மத்திய அரசு அறிவித்துள்ளது.

சமூக வலைதளங்களில், அதிக அளவில் பொய்யான தகவல்களும், குழந்தைகள் ஆபாச வீடியோக்களும் பகிரப்பட்டு வருகின்றன. இது குறித்து, பல வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. எனவே, ஒரு முறையான, நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும் என நீதிமன்றம் ஏற்கனவே அறிவுறுத்தி இருந்தது.

இதனிடையே சமூக வலைதளங்களில், போலீயான கணக்குகள் மூலம் வதந்திகளை மற்றும் ஆபாச வீடியோக்கள் பரவுவதையும் தடுக்க, ஆதார் அடையாள அட்டையை இணைக்கும் முயற்சியானது மேற்கொள்ளப்பட உள்ளது என்ற தகவல் வெளியானது. இதனால், பலரும் தங்களுடைய அடையாளங்கள் வெளியாகிவிடும் எனவும், இது கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது எனவும் தங்கள் எதிர்ப்பினைத் தெரவித்தனர்.

இது குறித்து, லோக் சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த இந்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் அட்டையை சமூக வலைதளங்களுடன் இணைக்கும் திட்டம் எதுவும் கிடையாது. ஆனால், சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் மற்றும் குழந்தைகள் ஆபாசப் படங்கள் பகிரப்படுவதை தடுக்க, நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தெரிவித்தார்.

HOT NEWS