அதிகரித்துள்ள ஆபாச வலைதள பயன்பாடு! மத்திய அரசு அதிருப்தி!

28 April 2020 அரசியல்
xvideosbanned.jpg

தற்பொழுது ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், ஆபாச வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.

இந்திய அளவில் தற்பொழுது, சிறார் ஆபாசப் படங்களைப் பார்ப்பவர்கள் மீது, காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தினைப் பொறுத்தமட்டில், 1000 பேர் கொண்ட பட்டியல் தயாராக இருப்பதாகவும், அவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் சட்டப்பிரிவு ஏடிஜிபியான ரவி ஐபிஎஸ் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்பொழுது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பெரும்பாலானவர்கள், கையில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதனால், அதனைப் பயன்படுத்தி ஆபாசப் படங்கள், வீடியோக்களைப் பார்த்து வருகின்றனர். இதனால், இந்தியாவில் ஆபாச வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையானது, கடுமையாக அதிகரித்துள்ளது.

இது குறித்து போர்ன்ஹப் வலைதளம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதில், இந்தியாவில் இருந்து எங்கள் வலைதளத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையானது, 91% அதிகரித்துள்ளது. இதனால், அவர்களுக்காக, பல இலவச வீடியோக்களையும், இலவச வசதிகளையும் அறிமுகப்படுத்தி உள்ளோம் என்றுக் கூறியுள்ளது.

HOT NEWS